Header Ads Widget

பக்கவாதம் Stroke பக்கவாத நோயும் அதைக் குணப்படுத்தும் வழிமுறைகளும்

 

பக்கவாதம் (Stroke)



*🍁பக்கவாதம் (Stroke)🍁*



🍁மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, அல்லது இரத்தக் கசிவு ஏற்பட்டு மூளைக்கு ஆக்சிஜன் செல்லாத போது, மூளை செயலிழப்பது தான் ‘பிரெய்ன் அட்டாக்’ எனப்படும் ஸ்ட்ரோக். தமிழில், பக்கவாதம்’. மூளைக்கு இரத்தம் செல்வது தடைப்பட்டால், மூளை செயல் இழந்து, மரணம் ஏற்படலாம்.



*இளம் வயதில் Stroke...*



🍁ஸ்ட்ரோக் பொதுவாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான் வரும். இவர்கள் புகைபிடிப்பவராகவோ, மது அருந்துபவராகவோ, சர்க்கரை நோயாளியாகவோ, கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவராகவோ இருந்தால் ரிஸ்க் அதிகம். தவிர, 40 வயதுக்குள் ஸ்ட்ரோக் வருவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. உடலில், புரோட்டின் சி, புரோட்டின் எஸ் குறைதல், ஹோமோசிஸ்டீன்’ என்னும் அமினோஅமிலம் அதிகரித்தல், ஆன்டித்ரோம்பின் – 3 குறைதல், கார்டியோலிபின் உடலில் தங்குதல் போன்றவற்றால் இளம் வயதில் ஸ்ட்ரோக் ஏற்படலாம்.



*குழந்தைகளுக்கு Stroke...*



🍁ஒரு சில குழந்தைகள் வளரும் போது, அவ்வப்போது திடீர், திடீரெனக் கீழே விழுந்துவிடுவார்கள். உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும், அடிக்கடி ஸ்ட்ரோக்குக்கான அறிகுறி தெரியும். சில குழந்தைகளுக்கு மூளைக்குச் செல்லும் அனைத்து இரத்தக் குழாய்களும் அவ்வப்போது சுருங்குவதால், இந்தப் பிரச்னை ஏற்படும். 


பக்கவாதம் trenmant



*பரிசோதனை...*



🍁உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை, கிரியாட்டினின், கொலஸ்ட்ரால், தைராய்டு அளவைப் பரிசோதிப்பதன் மூலம் ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை அறியலாம்.



*சிகிச்சை என்ன...?*



🍁ஸ்ட்ரோக் வந்தவுடன் உடனடியாக ஸ்ட்ரோக் யூனிட், அவசர சிகிச்சைப் பிரிவு வசதி உள்ள மருத்துவமனைக்குச் செல்வதுதான் சிறந்தது. மூன்றரை மணி நேரத்துக்குள் சென்றுவிட்டால், அவருக்கு இன்ட்ராவீனஸ் த்ரொம்போலைசிஸ்’ எனும் சிகிச்சை அளிக்கப்படும். இதை அளித்துவிட்டால், ஸ்ட்ரோக் வந்தவர் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிட முடியும். நேரம் கடந்துவிட்டால், இந்த தெரப்பி பயன் அளிக்காது.

🍁மூன்றரை மணி நேரத்தில் வர முடியாதவர்கள், ஸ்ட்ரோக் வந்த எட்டு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு வந்துவிட்டால், அவர்களுக்கு இன்ட்ரா ஆர்டிரியல் த்ரோம்போலைசிஸ்’ அல்லது மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி’ சிகிச்சை அளித்து, உயிரைக் காப்பாற்றலாம்.

🍁சில சமயங்களில் பின்மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு, ஸ்ட்ரோக் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு, 12 மணி நேரத்துக்குள் இந்த தெரப்பி கொடுப்பதன் மூலம் உயிரைக் காப்பாற்ற முடியும்.

🍁மருத்துவமனைக்கு 12 மணி நேரம் கழித்துச் சென்றால், பரிசோதனைக்குப் பிறகு மூளையின் வீக்கம் அளவிடப்படும்.

🍁மூளையின் வீக்கம் அதிகமாக இருந்தால், டீகம்ப்ரஸிவ் கிரேனியேக்டமி’ எனும் அறுவைசிகிச்சை செய்யப்படும். இதில், வீக்கம் உள்ள பகுதியில் மண்டைஓடு திறக்கப்பட்டு, வீக்கம் குறைந்த பின்னர், சில நாட்களில் அறுவைசிகிச்சை செய்தபின் மண்டைஓட்டை மூடிவிடுவார்கள். இவர்களுக்கு, கை, கால்கள், வாய் பழைய நிலைக்குத் திரும்ப வாய்ப்பு குறைவு. எனினும், உயிரைக் காப்பாற்ற முடியும்.


*தடுப்புமுறைகள்...*



🍁மினி ஸ்ட்ரோக் வந்தவர்களுக்கு, அவரவர் உடல்நிலையைப் பொருத்து, உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். சிலருக்கு, ஆஸ்ப்ரின் போன்ற இரத்தம் உறைவதைத் தடுக்கும் மாத்திரை அளிக்கப்படும். உடலில் ஹோமோசிஸ்டீன் அதிகமாக இருந்தால், ஃபோலிக்அமிலம் மற்றும் மெத்தில் கோபாலமைன் மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் சாப்பிட்டுவந்தால், ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்க முடியும்.


பக்கவாதம் trenmant 2


*நவீன சிகிச்சைமுறைகள்...*



🍁ஸ்ட்ரோக், மினிஸ்ட்ரோக் வந்தால் தற்போது உள்ள சில நவீன சிகிச்சை முறைகள் மூலம் உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது. மினி ஸ்ட்ரோக் அல்லது ஸ்ட்ரோக் வந்தால், இதயச் செயல்பாட்டை ஆய்வுசெய்ய வேண்டும்.

🍁பின்னர், கழுத்தில் உள்ள இரத்தக் குழாய்களில் அடைப்பு இருக்கிறதா என்பதை அறிய, டாப்ளர் பரிசோதனையும், சி.டி ஆஞ்ஜியோகிராபி பரிசோதனையும் செய்யப்படும்.

🍁பரிசோதனையில், இரத்தக் குழாய்களில் 50 சதவிகிதத்துக்கு மேல் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டால், கரோட்டிட் என்டார்டெரக்டமி (Carotid endarterectomy) என்ற அறுவை சிகிச்சை மூலம் அடைப்பு நீக்கப்படும்.

🍁ஒருவேளை, கழுத்தில் இருக்கும் ஏதாவது ஒரு இரத்தக் குழாய் முழுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்களுக்கு மூளைக்கு வெளியே இருக்கும் இரத்தக் குழாயை எடுத்து, மூளைக்கு உள்ளே வைத்து பைபாஸ் அறுவைசிகிச்சை (Cerebaral bypass) செய்து, ஸ்ட்ரோக் வருவதைத் தடுக்க முடியும்

Post a Comment

0 Comments